தனியார் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி
தனியார் பேருந்து மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காலியில் பத்தேகம பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் மீது மோதிய பேருந்து
காலியில் இருந்து பயணித்த தனியார் பேருந்தொன்று பேருந்து தரிப்பிடத்துக்குள் நுழையும் போது பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த பெண் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்தவர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
