கிண்ணியா பகுதியில் யானை தாக்கி வயோதிபர் மரணம்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இன்று (21.1.2024) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (68 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்த போது வயோதிபரை யானை தாக்கிய உள்ளது.

இந்நிலையில் அருகில் உள்ள வயல் உரிமையாளரான அவரது மகன் விழுந்து கிடந்த தந்தையை தூக்கிக் கொண்டு வரும்போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri