வயோதிபத் தாய் ஒருவர் கொடூரக் கொலை!
கண்டியில் வயோதிபத் தாய் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கண்டி- பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம்(28) இடம்பெற்றுள்ளது.
87 வயதுடைய வயோதிபத் தாயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
வயோதிபத் தாயின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டிலும், ஒரு பிள்ளை வீட்டில் இருந்து சற்றுத் தொலைவிலும் வசித்து வருகின்றனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று வயோதிபத் தாயின் மருமகள் வீட்டுக்குச் சென்று பார்க்கும் போது, வயோதிபத் தாய் அந்த கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் சிலர் வயோதிபத் தாயைக் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam