யாழ்ப்பாணத்தில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயின் வேதனை தாங்கமுடியாமல் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைச் சேர்ந்த கனகரத்தினம் லோகநாதன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் அவஸ்தைப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்றையதினம் காலை மண்ணெண்ணெய் அருந்தியுள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan