மன்னாரில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் மரணம்
மன்னாரில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்த வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கோவிட் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டநிலையில் குறித்த வயோதிபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் வீடுதிரும்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வயோதிபருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan