விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட வயோதிபர்
வெடிபொருட்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகங்கொட பிரதேசத்தில் வைத்து மேற்படி வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படை
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இறக்குவானை பகுதியில் வசிக்கும் 78 வயதுடைய வயோதிபர் ஆவார்.
அவரிடமிருந்து 2 கிலோ 888 கிராம் கோடையிட், 9 கிலோ 597 கிராம் அமோனியம், 15 வோட்டர் ஜெல் குச்சிகள், டெட்டனேட்டர் 25 மற்றும் வெடிமருந்து நூல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட வயோதிபர் மேலதிக விசாரணைகளுக்காக இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா





இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
