இலங்கையில் எல் நினோ தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை
'எல் நினோ' (El Niño) நிலைமையின் தாக்கம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய வானிலை மாற்றம் மற்றும் எல் நினோ நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
பருவக்காற்று நிலைமை
தென்மேற்கு பருவக்காற்று நிலைமை நாட்டில் நிலவிய போதிலும், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைவடைந்து வருவதால், எல்நினோ நிலைமை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
எல் நினோ நிலைமையின் பலத்த தாக்கம் இம் மாதங்களில் நாட்டில் எதிரொலிக்கும் எனவும் இக்காலப்பகுதியில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் எனவம் அவர் தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளதுடன், வெப்பநிலையும் கணிசமாக உயரக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி
நாளை மற்றும் நாளை மறுதினம் மழையின் அளவில் சற்றே அதிகரிப்பு காணப்படும் எனவும், இந்த மாத இறுதி வரை ஆங்காங்கே இடைக்கிடையே மழை பெய்யும் என்றும் மெரில் மெண்டிஸ் எதிர்வுகூறியுள்ளார்.
எனினும், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் ஒட்டுமொத்த மழை வீழ்ச்சி குறைவடைவதன் காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களுக்குக் கிடைக்கும் மழைவீழ்ச்சி குறையும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam