மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளில் 8 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர்கள்
மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளில் எட்டு கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற கலகத்தில் உயிரிழந்த கைதிகள் தொடர்பில் விசேட நிபுணர் குழுவொன்று பிரேதப் பரிசோதனை அறிக்கை தயாரித்து வருகின்றது. அந்த வகையில் இதுவரையில் எட்டு கைதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வத்தளை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் உயிரிழந்த எட்டு பேருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகப் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இன்னமும் மூன்று பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என முன்னதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri