தீப்பிடித்து எரியும் கப்பலின் பொருட்களை சேகரித்த 8 பேர் கைது
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் தீப்பிடித்துள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் இருந்து கரையொதிங்கிய பொருட்களை சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பமுணுகம, துன்கல்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை கடற்கரையேரங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளையில் இருந்து நீர்கொழும்பு வரையுள்ள கடற்கரையேரங்களில் இந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன் பெட்டிகளில் இருந்த பொருட்கள் கரையொதிங்கியுள்ளன.
அவற்றில் இருந்த பல பொருட்களை பலர் எடுத்துச்செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
எனினும் கப்பலில் இருந்த இரசாயன பொருட்களும் கடலில் விழுந்துள்ளதால், கரையொதுங்கும் எந்த பொருட்களையும் கையால் தொட வேண்டாம் என சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை மக்களுக்கு அறிவித்திருந்தது.