எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணையில் செல்ல அனுமதி
இரத்தினபுரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இரத்தினக்கல் திருட்டு தொடர்பான முறைப்பாட்டின் விசாரணையின் போது, சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடமிருந்து பணத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, விசாரணையை மேற்கொள்ளாமல் இருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது நடவடிக்கை
எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அளித்த புகாரைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரத்தினபுரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (4) அவர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டிருந்த தலா 10 லட்சம் ரூபா மதிப்புள்ள மூன்று பிணைப்பத்திரங்களின் பேரில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவருக்குப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புகார்தாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan