இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான எகிப்தின் புதிய பரிந்துரை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளன
இதன்படி எகிப்தின், போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்து தனது பரிந்துரையில்,
பணயக் கைதிகள்
"ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார்.
அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.
இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்" என குறிப்படப்பட்டுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவர 50,082 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,13,408 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
