முட்டை ஒன்றின் புதிய விலை! வெளியாகியுள்ள அறிவிப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கினால் 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மே மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளுக்கு தட்டுப்பாடு
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை வழங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை சில பேக்கரி உரிமையாளர்கள் நிராகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.