மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு
உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வற் வரி அதிகரிப்பு
VAT வரி அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 8 ரூபா அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலையை அரசாங்கம் 8.00 ரூபாவினால் அதிகரித்த போதிலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 3.00 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாய் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி சங்கத்தின் நிர்வாக சபையில் தீர்மானிக்கப்பட்ட இந்த விலையேற்றம் அன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தலைவர் சரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
