முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நுகர்வோர் விசனம்
சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களுக்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டை விலை குறித்து முன்னதாக வெளியான அறிவிப்பு
இதேவேளை கடந்த 12ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தது.
அதன்படி ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.58 ஆகவும், சில்லறை விலை ரூ.63 ஆக அதிகரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

முட்டை விநியோகத்தின் விலை அதிகரிப்பு மற்றும் பல செலவுகள் வர்த்தகத்தை பாதிக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam