முட்டைக்கான புதிய விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
முட்டைக்கான புதிய திருத்தப்பட்ட விலை இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முட்டைக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை இன்று (15.12.2022) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதன்போது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், முட்டைக்கான புதிய விலையை உடனடியாக நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri