வேகமாக அதிகரிக்கும் முட்டையின் விலை
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டைக்கு அதிக கிராக்கி
சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை முட்டை 50 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை 52 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் முட்டை மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்தது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் முட்டைகளுக்கு வழக்கத்தை விட அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இது கேக் உள்ளிட்ட முட்டை தொடர்பான உணவுகளை தயாரிப்பதற்காகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
