நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மீது முட்டை தாக்குதல்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் வாகன தொடரணி மீது முட்டைகளை எறிந்து எதிர்ப்பு வெளியிட்டப்பட்டுள்ளது இந்த சம்பவம் பாதுக்க பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பாதுக்க அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
பாதுக்க அபிவிருத்தி குழுவின் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார, தனி தீர்மானத்தின் பிரகாரம் செயற்படுவதாக தெரிவித்து, பிரதேச சபை உறுப்பினர்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கடும் எதிர்ப்பை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, அங்கிருந்து வெளியேறிய நிலையில், அவரது வாகன தொடரணி மீது முட்டைகளை எறிந்து, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
