அனுர குமார மீது முட்டை வீச 5000 ரூபா பணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல் (Video)
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது தாக்குதல் நடத்திய நபர்களுக்கு 5000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவர் தமக்கு 5000 ரூபாவை கொடுத்து இந்த இடத்திற்கு அனுப்பி வைத்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இருவரையும் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவரால் இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி.............
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் பொலிஸாரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
