இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கை தீவிரம்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, அதன் சொத்துக்களைப் புதிதாக நிறுவப்பட்ட ஆறு நிறுவனங்களுக்குப் பரிமாற்றும் பணிகளை வரும் பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னதாக முடிக்குமாறு மின்சக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால மின்சார சபைக்கு எழுத்து பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், மின்சார சபையின் அனைத்துச் சொத்துக்களும் முறைப்படி அந்தந்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு நிறுவனங்கள்
ஏற்கனவே ஊழியர்கள் இந்த ஆறு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய நிறுவனங்களுக்கு மாற விருப்பமில்லாத ஊழியர்களுக்குத் தன்னார்வ ஓய்வுபெறும் (VRS) வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் 2,173 ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை பெப்ரவரி முதல் வாரத்திற்குள் செலுத்தி முடிக்குமாறு மின்சக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த முழுமையான சொத்துப் பரிமாற்றம் மற்றும் ஊழியர் மேலாண்மைப் பணிகள் நிறைவடைந்தவுடன், இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு (Liquidated), அதன் அனைத்துச் செயல்பாடுகளும் இனி வரும் காலங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு நிறுவனங்களின் கீழ் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri