இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் தற்போதைய அரசாங்கம் - கந்தசாமி பிரபு எம்.பி
இந்த நாட்டினை பொறுப்பேற்றுள்ள அரசாங்கமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அதற்கான திட்டங்களையும் வகுத்து எதிர்காலத்தில் இளைஞர்களின் கைகளில் நாட்டினை வழங்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கிணைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இளைஞர்களை இணைப்போம் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது புனித செபஸ்த்தியார் ஆலய மண்டபத்தில் நேற்று மாலை (30) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த நாட்டின் எதிர்காலம்
மேலும் தெரிவிக்கையில், இளைஞர்கள் உங்களது எதிர்காலம் இந்த நாட்டினுடைய எதிர்காலம். நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருந்தோம் எங்களது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிலே உருவாக்கப்பட்ட விடயம் இளைஞர்களை ஒன்றாக திரட்டி அவர்கள் மூலமாக இந்த நாட்டை அவர்களுக்கான ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்பதே எமது தொனிப்பொருள்.
எங்களது அரசியல் செயல்பாடுகள் நாட்டின் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகள் முன்வைத்ததான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
புதிய செயல்திட்டம்
அந்த வகையில் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கின்றோம். அதில் ஒரு கட்டமாக தான் இந்த யூத் கனக்ட் 2025 என்கின்ற செயல் திட்டத்தை கூறிக் கொள்ள முடியும்.
அதேபோன்று முக்கியமாக தொழில் சிறப்புமிக்க விடயங்கள் அல்லது உங்களது வாழ்வை விருத்தி செய்யக்கூடிய உங்களது எண்ணங்களை வளர்க்கக்கூடிய போன்ற விடயங்களை இதனோடு நாங்கள் இணைத்து இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
