யாழில் அமெரிக்க கலாச்சார விழுமியங்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி - மேனகா நய்யர்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples United States of America Sri Lanka Government
By Kajinthan Apr 28, 2026 08:31 AM GMT
Report

அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் நேற்று(27.04.2026) இடம்பெற்ற 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில், அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு வசதிகளுக்கான வேலைத்திட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய "Freedom 250 Pavilion" கூடத்தினையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாக Jaffna Social Action Center உடனான பங்காண்மையுடன் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

யாழில் அமெரிக்க கலாச்சார விழுமியங்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி - மேனகா நய்யர் | Effort To Promote American Cultural Values Jaffna

திறனாய்வுச் சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்களில் திறன்களை கட்டியெழுப்பும் அதேவேளை, அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தகவல் கூடமானது, வட இலங்கையில் வளர்ந்துவரும் தலைவர்களை அமெரிக்க அனுபவங்களிலும், கண்ணோட்டங்களிலும் வேரூன்றிய சிந்தனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. ஊடாடும் நிகழ்ச்சித் திட்டங்களையும் சமூக நிகழ்வுகளையும் நடத்துவதற்கான இத்தகவல் கூடத்தின் திறனை Freedom 250 Pavilion விரிவுபடுத்துவதோடு, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் கற்றலுக்கான ஒரு ஊக்கம் நிறைந்த இடமாக அதன் பங்கினை மேலும் வலுப்படுத்துகிறது.

250 ஆண்டுகள் நிறைவு

அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்திலமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிக்கிறது.

எமது ஸ்தாபக இலட்சியங்களையும், யாழ்ப்பாணம் உட்பட உலகம் முழுவதும் காணப்படும் எமது பங்காண்மைகளையும் எடுத்துக்காட்டும் ஒரு மைல் கல்லான, அமெரிக்க சுதந்திரத்தின் 250 வருடங்களை அமெரிக்கா இந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

யாழில் அமெரிக்க கலாச்சார விழுமியங்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி - மேனகா நய்யர் | Effort To Promote American Cultural Values Jaffna

புதிய Freedom 250 Pavilion கூடம் மற்றும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றினூடாக, அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து, எமது வரலாறு, சமூகம் மற்றும் புத்தாக்கங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு சமூகத்தை நாம் அழைக்கிறோம்.

" யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடமானது 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 10,000இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் ஏறக்குறைய 400 நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியுள்ளது.

இலக்கம் 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இத்தகவல் கூடமானது, அமெரிக்கா, ஆங்கில மொழியினைக் கற்றல், கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திறன் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன தொடர்பான வளங்களை இலவசமாக வழங்குகிறது.

எமது இத்தகவல் கூடத்திற்கு நேரில் வருகை தருவதன் மூலமாகவோ, அல்லது 021 222 0665 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது info@americancornerjaffna.com மூலமாகவோ இங்கு நடைபெறும் இலவச நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்கலாம். ஊடாட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக அமெரிக்க மக்கள், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் கருத்துக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஓர் வரவேற்புமிக்க சூழலையும் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US