சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்..
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக தடைப்பட்டு காணப்படுகிறது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையின் தாக்கத்தால் குறித்த பாலம் பிரதான வீதியில் இருந்து பிரிந்து இரு துண்டுகளாக பிரிந்து அதன் நடுவே நீர் வேகமாக பாய்ந்து கொண்டு உள்ளது.
சிரமத்தில் மக்கள்
இதனால் குறித்த வீதியூடாக கோம்பாவில்லுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர்.
உரிய அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாலத்தைச் சீரமைத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri