காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறக்கம்: மின்சார உற்பத்தியில் பாதிப்பு
மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் பாரியளவில் நீர் தாழிறங்கியுள்ளது.
இந்த தாழிறக்கத்தினை அடுத்து பல பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தில் பாரிய அளவில் மாணிக்கக்கல் அகழ்வு குழிகள் காணப்படுவதாகவும் தேசிய நீர் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்கின்ற காசல் ரி நீர்த்தேக்கம் சீர்கேட்டுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த பாதுகாப்பு பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசல் ரி நீர்த்தேக்கத்தில் கனிசமான அளவு நீர் தாழிறங்கியுள்ளதனால் நீரில் மூழ்கி கிடந்த ஆலயங்கள் கட்டடங்கள்,மற்றும் வீதிகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன.
மின் உற்பத்தியில் பாதிப்பு
மலையகப்பகுதியில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேகத்திங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதுடன் நீர் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது.
எனவே பொதுமக்கள் நீரினை மிகவும் கவனமாக
பயன்படுத்துமாறும் நீர் நிலைகளை பாதுகாக்குமாறும் நீர்த்தேக்கங்களுக்கு
பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



