நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நிலை ராஜபக்சக்களுக்கு வருமா?
ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச உட்பட குற்றம் சுமத்தப்பட்ட சிறிலங்கா அதிகாரிகள் நாட்டுக்குள்ளேயே முடக்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகலாம் என்று பிரபல பொருளியல் நிபுணரும், புலம்பெயர் செயற்பாட்டாளருமான பாலா மாஸ்டர் தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்கொட்லன்ட் வர இருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை கைதுசெய்வற்கான அழுத்தங்கள் வழங்கப்படுமா, கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இலங்கை இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பின்னணி போன்றவை பற்றியும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.