பிரஞ்சு அரசாங்கம் முன்பு ஈழத்தமிழர்கள் போராட்டம்: முன்வைக்கும் கோரிக்கைகள்
நீதிக்காகவும் உரிமைக்காவும் எனும் தொனிப்பொருளில் நேற்றைய தினம்(22) ’எழுக தமிழா எழுச்சி பேரணி’ ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் இடம்பெற்றுள்ள அந்த பேரணி ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளங்களை அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தி 3 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்கள்
”ஈழத்தில் நடந்த மாபெரும் தமிழின அழிப்பு என்பதை பிரஞ்சு அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வலியுறுத்துகின்றோம், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரஞ்சு அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
தமிழ் மக்களை திட்டமிட்டு இனப்படு கொலை செய்த ஸ்ரீலங்கா பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும்.
தமிழீழ மக்களால் ஏகமனதாக ஏற்றுக்காள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் சுகந்திரத் தமிழீழம் மட்டும்தான் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்பதை பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும்
வலியுறுத்துகின்றோம்”. என்ற தொனிப் பொருள்களுடன் நடைப்பெற்றுள்ளது.
பங்களிப்பு
புலம்பெயர் தமிழர்களால் இடம்பெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.