சிங்கள சாதிபேத அரசியல் போட்டிக்கு பலிகடாவாகும் ஈழத் தமிழினம்

Tamil Sri lanka Kandy Caste Sinhalese
By Dias Jul 05, 2021 04:47 PM GMT
Report

 இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில்,

இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும்.

இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ரீதியான மனிதகுல ரீதியாக இழைக்கப்படும் மாபெரும் தவறாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் மதம், அரசியலில் குடும்ப சாதி மேலாதிக்கம், சிங்கள உயர் சாதியில் காணப்படும் உயர்சாதி மேலாதிக்கம் என்பன ஆழமான படிமங்களை கொண்டது. இவற்றில் சிங்கள ஆளும் உயர் குழாத்தில் பண்டாரநாயக்கா குடும்பம், சேனநாயக்கா குடும்பம், ராதுள்ள குடும்பம் போன்றவை முக்கியமானவை.

பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற உயர் குழாத்து திருமணங்கள் அரசியலிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. உதாரணமாக சந்திரிகா குமாரதுங்கா திருமணத்தின் போது அந்தக் குடும்பங்கள் இரண்டாக உடைந்தது. ஆனால் குமாரதுங்கவின் மரணத்தின்போதுதான் மீண்டும் இணைந்தனர்.

சாதி ரீதியான குடும்ப அந்தஸ்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ராத்துல குடும்பமும் இரண்டாவதாக பண்டாரநாயக்காவின் குடும்பமும் மூன்றாவதாக சேனநாயக்க குடும்பமும் அடுத்து ராஜபக்சே குடும்பமும் என இருக்கின்ற உயர் குலத்துக்கு இடையிலேயே கடுமையான சாதி பேதங்கள் உண்டு.

இவற்றுக்கு இன்று இருக்கக்கூடிய மத அரசியல் ரீதியான விடயங்களை இங்கே முக்கியமானவை. சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வார்த்தை உண்டு. அதாவது சிங்கள-S பௌத்த-B கொய்கம-G இந்த SBG தான் இலங்கை அரசியலையும் சிங்கள மக்களின் அரசியலையும் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகிறது.

அந்த வகையில்தான் இக்கட்டுரை இலங்கை அரசியலை சாதி அடிப்படையிலான மேலாதிக்க குணாம்சங்களை SBGயின் அடிப்படையில் நோக்குகிறது.

இந்த சிங்கள உயர்குழா சாதிய மேலாதிக்கத்தை தெரிந்து கொள்ளாமல் தமிழ் மக்கள் சிங்கள அரசியலை கையாள முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயை உண்டு சிங்கள மக்கள் மத்தியில் தீண்டாமை இருந்தமையினால் சிங்களவர் மத்தியில் சாதிப் பாகுபாடு இல்லை என்றும் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமே சாதிப் பாகுபாடு உண்டு என்ற கருத்தும் நிலவுகிறது.

இலங்கை அரசியலில் ஆரம்ப காலத்தில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை அரசியலில் சிங்களவர்கள் மத்தியில் இரண்டு சாதிப் பிளவு அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஒன்று சிங்கள பௌத்த கொய்காம, இரண்டு சிங்கள கரவா என்பது மீன்பிடித் தொழிலோடு சம்பந்தப்பட்டது.

  சிங்களவர் மத்தியல் பல சாதிக் கட்டமைப்புகள் இருக்கின்றன அவையாவன

1. அஹிங்குந்தய (நாடோடிகள்)

2. பட்டஹல – குயவர்

3. பத்கம – பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பல்லக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்)

4. பெராவ – பறையடிப்பவர்

5. கொவிகம – பாரம்பரிய கமக்காரர்கள் மற்றும் பண்ணையாளர்கள்.

6. ஹாலி – நெசவாளர்கள்

7. ஹன்னாலி – தையற்காரர்

8. ஹூனு – சுன்னக்கல் செய்பவர்கள்.

9. கின்னரய – பாய் பின்னுபவர்கள்.

10. நவந்தன்ன – பொற்கொல்லர். (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு – கூலி விவசாயிகள்

12. பன்ன – புல்வெட்டுவோர்

13. அம்பெட்ட (பனிக்கி) – முடி திருத்துவோர்

14. பட்டி – கால்நடை வளர்ப்போர்

15. பொரவக்கார – மரம் தறிப்போர்

16. றதல – நிலப்பிரபுக்கள் (குறிப்பாக கண்டி இராச்சிய காலத்தில்)

17. ராஜக்க, ஹேன – சலவைத்தொழிலாளர்கள்

18. றொடியா -தாழ்த்தப்பட்டோர்

19. வக்கும்புர (ஹக்குறு) – கருப்பட்டி தயாரிப்பாளர்கள்

20. கராவ – பாரம்பரிய மீன்பிடித் தொழில் செய்வோர்

21. துராவ – பாரம்பரிய படைவீரர் – காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்

22. கட்டர – விவசாயிகள்

23. தெமல கட்டர – தமிழ் தாழ்த்தப்பட்டோர்

24. பட்டஹல (கும்பள்) – குயவர்

25. ஹன்னலி – தையற்காரர்

26. ஹின்ன – சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்

27. ஹாலி – நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்

28. கஹல – கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர்  சுத்திகரிப்போர்

29. கின்னர – பாய் பின்னுவோர்

30. ரதா – உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்

31. ஹின்ன – மாவு சலிப்போர்

32. சலாகம – கருவா செய்கையில் ஈடுபடுவோர்

சிங்கள சாதியமைப்புக்கும் தமிழ் சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை இங்கே காணலாம். உயர் சாதிக் கொய்கம இவர்களுடன் போட்டிக் உரியவர்களாக இரண்டாமவர் சிங்கள கரவா சமூகத்தினர். கண்டிச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்ற வேறுபாடு வேறு. கொய்காம கரவ சாதிப்பாகுபாடு வேறு.

ஆனால் இவ்விரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்வது தவறானதாகும். இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

கண்டிச் சிங்களவர்கள் மத ரீதியான ஆதிக்கத்திற்கும் கரையோர சிங்களவர்கள் சனத் தொகை அடிப்படையில் அரசியல் ரீதியான ஆதிக்கத்தையும் கொண்டவர்கள். கண்டி பௌத்த கொய்கமவும் கரையோர பௌத்த கொய்கமவும் இரண்டும் இணைந்ததுதான் கொய்கம அரசியல் மேலாதிக்கம் ஆகும்.

இதுவே இலங்கையின் மத அரசியலை தீர்மானிக்கின்ற மேலாதிக்க கூட்டுக் குழுமாகும். உதாரணமாக கண்டி சிங்களவர்கள் தம்மை கரையோர   சிங்களவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லிக் கொண்ட போதிலும் கரையோர கொய்கம பண்டாரநாயக்கா குடும்பம் அரசியல் நோக்கம் கருதி உயர்ந்த கண்டிச் சிங்கள ரத்துல குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ மாவை திருமணம் செய்ததன் மூலம் இரண்டு சாதியினரும் தம்மை சமன்செய்து பலப்படுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் பிரதேச ரீதியாக இரண்டு பட்டிருந்த கொள்கை மக்கள் இலங்கை அரசியலில் ஒன்று படுத்தப்பட்டனர்.

இத்தகைய திருமணங்கள் பல நடந்தேறின. இதன் ஊடாக இலங்கையில் மத ரீதியான ஆதிக்கத்தை கண்டி கொய்கமக்களும், அரசியல் ரீதியான ஆதிக்கத்தை கரையோர கொய்கமக்களும், பெற்றனர். இவ்விருவரும் இணைப்பின் ஊடாக இலங்கையில் கொய்கம மேலாதிக்கம் அரசியல் சமய சமூக மட்டத்தில் மேலே மேலெழுச்சி பெற்று அனைத்து வகை ஒடுக்குமுறையையும் முன்னெடுக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சிங்கள அரசியலில் முதன்முதல் தோன்றிய முரண்பாடாக பௌத்த கொய்கமக்களும் கரையோர கரவ சமூகத்திற்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டு பிளவுபட்டது.

இந்த கரவ சமூகத்தில் கணிசமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பதுவும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் சிங்கள பௌத்த கொய்கம ஆதிக்கத்துக்கு எதிராக அவர்களுக்கு அடுத்த தட்டில் இருந்த சிங்கள கரவா சமூகம்தான் புரட்சிகரமானதாக வெடித்து எழுந்தனர்.

இலங்கையில் மார்க்சியத்தின், கம்யூனிஸத்தின் தந்தை என அழைக்கப்படும் பிலிப் குணவர்த்தன கரவ சமூகத்தில் இருந்து வந்தார். இவருடைய மகன்தான் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்த்தன அவர்.

பிலிப் குணவர்த்தனா வின் மனைவி உயர்ஜாதி கொய்கமக்களும் சமூகத்தைச் சேர்ந்தவர். பிலிப் குணவர்த்தன தந்தையாக கொண்டு ஜனநாயக ரீதியில் இலங்கையில் தோன்றிய இடதுசாரி அமைப்பில் இருந்து சிங்கள கரவ சமூகத்தைச் சேர்ந்த என் எம் பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா, விசா பெர்னாட் சோய்ஷா போன்ற தலைவர்களும், அரை இடதுசாரி யான விஜயகுமார ரணதுங்கவும் எழுச்சி பெற்றனர்.

இதில் பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா, இவரும் நேரடியாக மீனவ சமூகத்தைச் சார்ந்தவர்கள் மொத்தத்தில் இலங்கையில் கரவ துரவ சலாகம பிரவ சமூகத்தின் 20 வீதமானவர்கள் கொய்கம எதிர்ப்பு அணியினராகவே உள்ளனர்.

இன்றைய விமல் வீரவன்ச பிரவ சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. மேற்குறித்த கரவ துரவ சலாகம பிரவ சமூகத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் இந்தியாவின் தமிழ்நாட்டின் கரையோரங்களில் இருந்து இலங்கை நோக்கி வந்து குடியேறிய மக்கள் கூட்டத்தினர்.

இதற்கான துல்லியமான வரலாற்றுப் பதிவுகளும் ஆதாரங்களும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. மைக்கல் ரோபோட் அவர்களின் ‘‘கரவா பொலிடெக் இன் ஸ்ரீலங்கா‘‘ என்ற நூலில் இதனை விரிவாக பார்க்கலாம்.

தொடரும்...

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

01 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US