ஈழத்து சிதம்பர மடாலய விவகாரம்: தலைவரை நேரில் சென்று அழைப்பது தொடர்பில் முடிவு (Photos)
ஈழத்தைச் சிதம்பரம் காரைநகர் சிவாலயத்தில் மாணிக்கவாசகர் மடாலயம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அதன் தலைவர் நாகரத்தினத்தை நேரில் சென்று கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுவது தொடர்பில் காரைநகர் புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்த இரண்டாவது கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேலஸ்தானத்திற்கு உரித்தான மாணிக்கவாசகர் மடாலயம் சம்பந்தமாக நீதிமன்றில் உள்ள பிரச்சினைகளைச் சுமுகமாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துவைப்பதற்காக காரைநகர் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் நலன்விரும்பிகள்ளில் இரண்டாம் தடவையாக நேற்றைய தினம் (27.05.2023) ஆலய முன்றிலில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்துக்கு ஆலயத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சுதாலிங்கம் குகநேசன் இரண்டு கூட்டத்திற்கு சமூகமளித்த போதும் மாணிக்கவாசக மடாலய தலைவருக்கு அழைப்பு விடுத்ததாலும் இரண்டாவது முறையும் கூட்டத்துக்கு வருகைதராது புறக்கணித்துள்ளார்.
சுயாதீனமான ஆறு உறுப்பினர்கள்
பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் நாகரத்தினம் ஆலயத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதிச் சூழல் பேணலில் அக்கறையுடையவர்கள் கூட்டத்திற்கு அழைத்தும் ஏன் புறக்கணித்து வருகிறார் எனக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருதரப்பினரையும் திறந்த நீதிமன்றில் பேச்சு வார்த்தை மூலம் பொது இணக்கப்பாட்டு ஒன்றுக்கு வருமாறு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கூட்டத்துக்கு வரும் நிலையில் ஒருவர் மட்டும் அதனைப் புறக்கணிப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் கூட்டத்துக்கு முன்னர் சுயாதீனமான ஆறு உறுப்பினர்கள் மாணிக்கவாசகர் மடாலயத்தின் தலைவர் நாகரத்தினத்தை நேரில் சென்று கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுவாத தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
