ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்த ச.குகதாசன் எம்.பி
திருகோணமலை மாவட்ட மூதூர் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்றில் உள்ள தி/மூ/ திருவள்ளுவர் வித்தியாலயத்துக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நேற்று(17)விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பௌதீக வளங்கள் பற்றாக் குறை தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
கோரிக்கை மனு
குறிப்பாக குறித்த பாடசாலையில் சுமார் 470இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நேரத்தில் கணிதம், சமயம், விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இன்மையால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கட்டிட வசதி உட்பட சிற்றூழியர் பற்றாக் குறை நிலவி வருவதாகவும் தெரிவித்தனர் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை பாடசாலை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் கையளித்தனர்.
இதனை ஏற்ற நாடாளுமன்ற உறுப்பினர் இது விடயமாக ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
