தமிழர் பகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக ஈரோஸ் அறிவிப்பு!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (05.10.2024) இடம்பெற்றுள்ளது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியம்
இதன்போது, தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையினை தக்கவைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.

இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர். பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்” என கூறியுள்ளார்.
அதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri