பாடசாலை உபகரணங்களின் விலைகளில் ஏற்படும் பாரிய மாற்றம்
செஸ் வரி அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களுக்கு நூற்றுக்கு 300 வீதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 630 அத்தியாவசிய பொருட்களுக்கான செஸ் வரியை அதிகரித்து வர்த்தமானியை வெளியிட்டார்.
பாடசாலை மாணவர்களுக்கு இன்னல்
செஸ் வரியை அதிகரித்ததன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாடசாலை மாணவர்களையும் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதன்வாயிலாக பாடசாலை உபகரணங்களுக்கு நூற்றுக்கு 300 வீதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.10 ரூபாவிற்கு கொள்வனவு செய்த பென்சில் ஒன்றினை தற்போது 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும்.
பென்சில் சீவும் கருவி, பேனை, ஆகியவற்றை 180 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும். சீ ஆர் பயிற்சிப் புத்தகம் ஒன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
செஸ் வரி
இதன்போது குறுக்கிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளில் தன்னிறைவு இன்மையினால், வெளிநாடுகளிலிருந்து குறித்த பொருள் இறக்குமதி செய்யப்படுகின்ற போது அதற்கு விதிக்கப்படும் வரியே செஸ் வரியாகும்.
செஸ் வரி அதிகரிப்பினால் உணவின் விலை அதிகரிக்கும் ஏதுநிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் உணவு தொடர்பான எந்தவொரு பொருளுக்கும் செஸ் வரி விதிக்கப்படவில்லை.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை பிரிதொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கான தேவை ஏற்பட்டது.
பென்சில், பேனை, பயிற்சி புத்தகங்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால், தேசிய உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் உதவி செய்யவும் திட்டங்களை கொண்டுள்ளோம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
