ஹட்டனில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்கைநெறி உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஆதி யோகி யோகார்ண்யம் அமைப்பின் செயல்திட்டத்தின் கீழ் அறநெறி பாடசாலை மாணவர்கள் பயன்பாட்டிற்காக வெண் பலகை, விரிப்பு, விளையாட்டு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வொன்று ஹட்டன்(Hatton) சிவாலய இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று(23.06.2024) இடம்பெற்றுள்ளது.
தேவையான உபகரணங்கள்
இந்த நிகழ்வில் ஹட்டன் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டங்களிலிருந்து சுமார் 30 அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஆதி யோகி யோகாரண்யத்தின் ஸ்தாபக தலைவர் S. தனசேகரன் குருஜீ, தலைவர் R. விஸ்வநாதன், செயலாளர் V. ஏகாம்பரம், பொருளாளர் P. முரளி, திட்டமிடல் பொருப்பாளர் சங்கர் சுரேஷ், ஊடக பொருப்பாளர் S. சிவகுமார்,ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்து சுயம் சேவா அமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் கல்வி பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான சாந்தகுமார், முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் நோ ரூட்டு இந்து கலாச்சார பேரவையின் தலைவர் ஆறுமுகம் ராசையா, அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.