பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கல்வியமைச்சு நன்றி தெரிவிப்பு
பல்கலைக்கழகங்களில் மீண்டும் விரிவுரைகளை ஆரம்பிப்பதற்கு எடுத்தத் தீர்மானம் தொடர்பில் கல்வி அமைச்சு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.
விரிவுரையாளர் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சங்கம் அண்மையில் சமர்ப்பித்திருந்த நெருக்கடிகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக உள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க மத்தியஸ்தம் வகிக்குமாறு கல்வி அமைச்சு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
 இது தொடர்பாக
தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இருக்குமாயின்  அதற்காக
எந்தவொரு தினத்தையும் ஒதுக்கத் தயார் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri