நாட்டில் தயாராகும் புதிய தேசிய கல்விக் கொள்கை - பாடசாலைப் பாடத்திட்டத்தில் இலங்கை சட்டம்
நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கல்வி அமைச்சு சார் ஆலோசனைக் குழுவிலேயே வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான தொழிநுட்பக் குழுவின் அறிக்கை இரு வாரங்களுக்குள் உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.
சட்டத்தை தனியானதொரு பாடமாக அல்லாது குடியியல் கல்வியில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.