கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு - வெளியான விசேட சுற்றுநிரூபம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "வெசாக் வாரத்தில்" பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக இந்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மே 26ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவித்து, அந்த காலப்பகுதியில் உரிய நிகழ்ச்சிகளை கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இந்த சுற்றுநிரூபத்தின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
நிகழ்விற்கான ஏற்பாடு
2026 மே 30ஆம் திகதி வெசாக் தினம் அமையப் பெற்றுள்ள நிலையில், இம்முறை அரசு வெசாக் விழாவை மே 27ஆம் திகதி மாத்தறை, திஹகொடையில் உள்ள மிதெல்லவல புராதன விகாரையில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் என்பன ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இதற்கு இணையாக கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வழிகாட்டல்களையும், முன்மொழியப்பட்ட மாதிரித் திட்டத்தையும் அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
அந்தந்த பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri