கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்! வெளியானது அறிவிப்பு
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பது தொடர்பில் கல்வி அமைச்சால் புதிய தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த ஒரு மணித்தியால நீடிப்பு தற்காலிகமாக கைவிடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில் நாளை முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலம் நீடிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அந்த தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.