பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிக்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டு பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24.1.2024) உரையாற்றும் போதே அமைச்சர் குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
பரீட்சை விடைத்தாள் திருத்தம்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
