தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை
அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்ச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ஜூன் 24ஆம் திகதி இது தொடர்பிலான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு கடந்த ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சுற்றறிக்கைகளின் குறைபாடு
குறித்த சுற்றறிக்கையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் பாடசாலைக்கு சேர்க்கப்பட வேண்டும் என்று புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின் பிரிவு 2.1 இல் சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் மூலம், பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் ஐந்து வயதுக்கு குறைவான மற்றும் வயதுச் சான்றிதழை வழங்கும் குழந்தைகளுக்கு நியாயமற்ற அல்லது பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பிரிவு 6.2.5 இல் "ஒருவரின் சொந்தக் குழந்தை அல்லது பேரக்குழந்தை, பேத்திகள் அல்லது ஒருவரின், மனைவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள்", "ஒருவரின், மனைவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள்" என்று திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முன்னைய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan