மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் காலமானார்
மூத்த ஊடகவியலாளரும், பத்திரிகை ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதன் தனது 79ஆவது வயதில் இன்று காலமானார்.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ம.வ.கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்திலிருந்து ஊடகப் பணியாற்றிய மிகச் சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் இவரும் ஒருவர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாகச் சூழலில் அர்ப்பணிப்புடன்
கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ். ஊடக
அமையத்தினால் அவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan