இலங்கை ஏற்றுமதியில் ஏற்படவுள்ள புரட்சி! அதிகரிக்கவுள்ள அந்நிய செலவாணி
இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கையின் சக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
The ??-@FAO-??project that will be implemented in #Kalutara, #Gampaha, #Monaragala, #Anuradhapura & #Kilinochchi districts. The technology & expertise shared will ensure high-quality fruits from #SriLanka reach global markets faster.@FAOSriLanka @FAODG @cidcaofficial pic.twitter.com/29wufoIKgR
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) May 11, 2023
உலக சந்தை
களுத்துறை, கம்பஹா, மொனராகலை, அநுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இலிருந்து உயர்தர பழங்கள் உலக சந்தைகளை விரைவாக சென்றடைவதை உறுதி செய்யும் திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |