வடக்கு - கிழக்கு விவசாயிகளினுடைய பொருளாதாரத்தை அரசாங்கம் பாழடிக்கின்றது: அருளானந்தராஜா ரமேஷ் (video)
இலங்கையில் சுதந்திரத்திற்கு பிற்பாடு ஏதோ ஒரு வகையில் திட்டமிட்டு வடக்கு மற்றும் கிழக்கு விவசாயிகளினுடைய பொருளாதாரத்தை அரசாங்கம் பாழடிக்கின்றது என்பதை உறுதியாக கூற முடிகிறது என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகாரசபை தலைவர் அருளானந்தராஜா ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் நேற்று (14.02.2023) இடம்பெற்ற கலந்துரையாடளின் பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 90 வீதமான அறுவடைகள் நடந்து முடிந்த நிலையிலே அரசாங்கம் விடுக்கின்ற கொள்கைகள் திட்டமிடல்களிலுள்ள தாமதம் காரணமாக நமது விவசாயிகள் ஒரு மூடை நெல்லுக்கு 2000 ரூபாய் நட்டமடைய வேண்டிய ஒரு இக்கட்டான நிலையை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயம்
கடந்த மூன்று போகத்திலும் சேதன உரத்தினை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த போது பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருந்தோம்.
இந்த சேதன உரத்தினை பயன்படுத்தி விவசாயத்தினை முன்னெடுத்த நிலையில் மஞ்சள்நோய் மற்றும் நெமடோட் எனப்படும் வேர் முடிச்சு நோய் காரணமாக வளமையாக கிடைக்கும் அறுவடையை பார்க்கிலும் இம்முறை குறைவான அறுவடைகளே இருக்கின்றது.
அரைவாசிக்கும் குறைவான விளைச்சலினை பெற்ற வேளையில் விவசாயிகள் ஒரு மூடை நெல்லினை 4200 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய துர்ப்பாக்கிய நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
