பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை: எச்சரிக்கும் நிபுணர்கள்
நாட்டில் உள்ள 14,000ற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதால் பொருளாதாரத் துறைகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறுவது பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை அச்சுறுத்தும் என்று நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 2020 இல் 2,957 மற்றும் 2021 இல் 8,373 தொழில் வல்லுநர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆண்டு 14,307 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியள்ளனர்.
குறித்த விடயமானது நாடு ஒரு பெரிய பின்னடைவை நோக்கிச் செல்வதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
மருத்துவ நிபுணர்கள் சங்கம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 8,130 நடுத்தர அளவிலான ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும்12,000 க்கும் மேற்பட்ட எழுத்தர் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் இருந்து வெளியேரும் மருத்துவ ஆலோசகர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் அதே வேளையில், இளம் நிபுணர்களைத் தக்கவைக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயிற்சி பெற்ற 30 ஆலோசகர் அவசர மருத்துவர்களில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டில் உள்ள ஒரே குழந்தை கதிரியக்க நிபுணர் புலம்பெயர்ந்துள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசகர் பயிற்சிக்கு செல்லும் 70-80% பேர் திரும்பி வருவதில்லை.
கிராமிய வைத்தியசாலைகள்
அதிக எண்ணிக்கையிலான இளம் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இந்த நேரத்தில், சிறப்பு ஆலோசகர் மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில் அவர்களின் வயது வரம்பை அதிகரிக்கத் தவறினால், சுமார் 600 ஆலோசகர்கள் ஓய்வு பெறுவார்கள்.
நாட்டில் ஏற்கனவே சுமார் 2,000 ஆலோசகர்கள் பற்றாக்குறையாக உள்ளது. நல்ல தங்குமிட வசதியின்மை, மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை வசதிகள் இல்லாமை என்பன கிராமிய வைத்தியசாலைகளில் சேவையாற்றும் இளம் நிபுணர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
பல்கலைக்கழக தகுதிகாண் விரிவுரையாளர்களாக பல்கலைக்கழகங்களில் 1 அல்லது 2 வது மேல்நிலைகளை இழக்கும் அபாயம் இருப்பதாக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கணக்குக் குழு (COPA) கூட்டத்தில், அரசாங்க ஆய்வாளர் தீபிகா செனவிரத்ன, விஞ்ஞான உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் 25 வெற்றிடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். திரட்டப்பட்ட அறிக்கைகளை முடிக்க ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
இதற்கமைய இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க, தனியார் மற்றும் அரச வங்கித் துறையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலைகளில் இலங்கையின் தொழில் வல்லுநர்கள் வெளியேறுவதால் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் சவாலாக அமையும்."என வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |