ரஷ்ய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை - அதிரடி காட்டும் உக்ரைன் அரசு
உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதுடன், உக்ரைன் அரசு தொடர்ந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.

பொருளாதார தடை
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய சார்பு தேவாலயத்துடன் 10 மூத்த மதகுருக்கள் தொடர்பில் இருந்ததாகவும், ரஷ்ய அதிகாரிகளுடன் பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam