பிரித்தானிய பிரதமரால் திரும்ப பெறப்பட்ட பொருளாதார கொள்கை
தமது அரசாங்கத்தின் நிதியமைச்சரை பதவி நீக்கிய பின்னர், பொருளாதார கொள்கையையும் பிரித்தானிய பிரதமர் திரும்ப பெற்றுள்ளார்.
இதனையடுத்து, நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியில் பாரிய பின்னடைவை எதிர்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பதவி நீக்கம்
முன்னதாக வரிக்கொள்கையில் மேற்கொண்ட மாற்றம் மேற்கொண்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து நிதியமைச்சர் பதவியில் இருந்துகுவாசி குவார்டெங் நேற்று பிரதமரால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதமர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி பொருளாதார மீட்பு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
வரியில் மாற்றம்
இதில் கூட்டுறவு வரியை 19 வீதத்தில் இருந்து 25 வீதமாக உயர்த்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் அடங்கியிருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர், கருத்துரைத்துள்ள கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தாம் பிரதமரின் கொள்கை தொடர்பில் விரக்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில உறுப்பினர்கள், பிரதமரின் அறிவிப்புக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.