பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு மக்களிடமிருந்து விடுதலையில்லை: சஜித்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிலைக்குக் காரணமானவர்களுக்கு மக்களிடமிருந்து விடுதலை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தொட்டை நகரில் இன்று மக்களைச் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பொருளாதார அழிவிற்குப் பொறுப்பானவர்கள் பதவி விலகினாலும், மக்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலை கிடையாது. இன்று அடுப்பில் நெருப்பு இல்லை, மக்களின் இதயங்களில் தான் நெருப்பு உள்ளது.
இன்று இந்த நாடு மூச்சு விட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மொட்டு அரசாங்கத்தினால் இந்த நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அழிவின் பிரதான சூத்திரதாரிகள் பதவி விலகிச் செல்கின்றனர்.
பதவி விலகியவுடன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.
இந்த அரசாங்கம் மக்களுக்குக் கண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan