பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பான வரைப்படத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை முன்வைக்க வேண்டும். அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் நெருக்கடிக்கான தீர்வை காணும் வழிமுறை வரைப்படததை ஏன் சமர்ப்பிக்கவில்லை?.
நாட்டில் டொலர் பற்றாக்குறை இருப்பதாக கூறி, தற்போது நாட்டின் காணிகளை விற்பனை செய்ய போகின்றனர். அரசாங்கத்தின் நெருக்கடியை தீர்ப்பதற்கான தீர்வு திட்டங்கள் என்ன?.
அரசாங்கத்திற்கு எவ்வித திட்டங்களும் இல்லை. ஆளும் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று சொல்கின்றனர்.
மேலும் சிலர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். அரசாங்கம் தற்போது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.



