இலங்கையில் பணம் செலுத்த முடியாத நிலையில் சாரதியின் விபரீத முடிவு
கண்டி, மஹய்யாவ பகுதியில் குத்தகை தவணை செலுத்தாததால் முச்சக்கரவண்டி எடுத்து செல்லப்பட்டதால் மனமுடைந்தவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்துக் கொண்டவர் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களின் தந்தையான எஸ். பிரியங்கார என தெரியவந்துள்ளது.
குத்தகை தொகை
உயிரிழந்தவரின் மனைவி குவைத்தில் பணிபுரிந்துவிட்டு கடந்த டிசம்பர் மாதம் நாட்டிற்கு வந்திருந்ததாகவும், அப்போது அவரது முச்சக்கரவண்டி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்தமையினால் அதனை எடுத்துச் செல்லப்படும் என எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த நிலையில் மீண்டும் முயற்சித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தின் பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாதிக் சித்தீக்கினால் மேற்கொள்ளப்பட்டது.
மரண விசாரணை
முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை கவனத்தில் எடுத்த கண்டி தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டபிள்யூ.எம்.பி விஜேகோன் தற்கொலை என்று தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
