பொருளாதார நெருக்கடி ஆற்றல் நெருக்கடியாக மாறுகின்றது! - இலங்கை அரசுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் ஜனவரிக்குள், தற்போதைய லெபனான் போன்ற கடுமையான ஆற்றல் நெருக்கடியை இலங்கை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக ஆற்றல் நெருக்கடியாக மாறி வருவகின்றது. கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விடப்பட்ட ஐந்து டெண்டர்களுக்கும் விண்ணப்பதாரர்கள் எவரும் முன்வரவில்லை.
எனவே எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமை காரணமாக, நவம்பர் முதல் எரிபொருள் இருக்காது எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சாரம் இழப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
