மகிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோரிக்கை
மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உட்பட சிலருக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்று உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் உட்பட சில தரப்பினர் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவர்கள் தூரநோக்கற்ற செயற்பாடுகளை கையாண்டு நாட்டையும் மக்களையும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளியமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அதற்கு எதிராக விசாரணை நடத்துமாறு உத்தரவிட கோரியும் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி உட்பட முக்கிய பிரதிவாதிகள்

இந்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் உட்பட பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri