பிரித்தானிய மக்களின் மோசமான நிலை! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
சமகாலத்தில் பிரித்தானியாவில் உணவுகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
இதனால் மக்கள் உணவு வங்கிகளை நோக்கி செல்லும் போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவிகளை நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமையில் மக்கள்
இந்த நிலையில், லண்டனில் மக்கள் சிலர் உணவுக்காக மோதிக்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் நடுத்தர மக்கள் பலர், சூப்பர் மார்கெட் செல்லும் போது, அங்கே விலை குறைக்கப்பட்ட (மஞ்சள் ஸ்டிகர்) ஒட்டிய உணவுகளை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லண்டனில் உள்ள, ஒரு டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் மக்கள் விலை குறைக்கப்பட்ட உணவு பொருளை பெற்றுக்கொள்வதற்காக அடிதடியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த காணொளியில் வெளியாகியுள்ளது.
மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டிய உணவுப் பொருட்கள்
குறித்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில், மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டிய விலை குறைந்த உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட உடனே அதனை முண்டி அடித்த மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, உணவுகளை தாம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இதில் சிறுமி ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளதுடன், சிறுமி என்று கூடப் பாரமல் அவரையும் தள்ளி விட்டு, உணவை கைப்பற்ற மக்கள் முனைந்த காட்சி பெரும் அதிர்ச்சி தருகிறது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த காணொளி மக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.