ஏறாவூர் பகுதியில் பதற்றம் - பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் (VIDEO)
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் பதற்றம் நீடித்துள்ள நிலையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் மற்றும் அவரது வீடு, அத்துடன், அவரது தம்பியின் உணவனம் என்பன ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பகுதிக்கு பாதுகாப்பு தரப்பினர் வரவழைக்கப்பட்டதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஒரு பகுதியாகவே தற்போது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.







கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
